சென்னையில் ரூட் தல யார் என்பதில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல யாரென்று தகராறில் இரு பிரிவாக பிரிந்து அகதிகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலர் கடற்கரை சந்திப்பில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது விடுதலை யாரென்று விவகாரத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ராயபுரம் ரயில் நிலையம் அருகே சென்றபோது அபாயம் சங்கை பிடித்து இழுத்து ரயிலை நிற்க வைத்த மாணவர்கள் ரயிலில் இருந்து கீழே இறங்கி உள்ளனர். பிறகு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக கற்களால் தாக்கிக் கொண்டனர். ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 9 மாணவர்களை மடக்கிப்பிடித்து எழும்பூர் ரயில்வே காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் தப்பியோடிய மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.