குடியாத்தம் ரயில்நிலையத்தில் இந்திஎழுத்துகள் அழிப்பு போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்ததற்கு போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஞானப்பிரகாசன் என்பவர் திமுக குடியாத்தம் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ளார். இந்நிலையில் அவரது தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட திமுகவைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி குடியாத்தம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 

இதனால் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின் ரயில் நிலையத்தின் பதாகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த குடியாத்தம் காவல்துறையினர் 22 பேரை கைது செய்தனர்.


Leave a Reply