திருச்சி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இன்று அதிகாலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு ஒன்று தொப்புள் கொடியுடன் ஒரு துணியில் சுற்றப்பட்டு கிடந்தது. சுகாதார வளாகத்திற்கு வந்த இந்துமதி என்ற பெண் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் அளித்த தகவல் படி சம்பவ இடத்திற்கு வந்த செவிலியர் குழந்தையை தூக்கிச் சென்று முதலுதவி அளித்துள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் ஆண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.