சுபஸ்ரீயின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின்
பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்ட்ரல் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுவதியின் வீட்டிற்கு சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீ பெற்றோருக்கு உதயநிதி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி திருமணம் முடிந்தும் பாடல்களை அகற்றாமல் இருப்பதே விபத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




