பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாளன்று சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார்!
பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்த நாளை தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாடி வருகிறார். இன்று தனது 69வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் மோடி நேற்று இரவு தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அவருக்கு குஜராத் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்து நிலையில் இன்று காலை நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய அணையான சர்தார் சரோவர் அணைக்கு சென்றார்.

சர்தார் சரோவர் அணை முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் குஜராத்தில் நர்மதை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்று வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நர்மதா அணை அருகே உள்ள வனவிலங்கு பூங்காவுக்கு சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் பேட்டரி காரில் பயணித்து பூங்காவை சுற்றி பார்த்தார். அதைத்தொடர்ந்து கலைவாணி ஈகோ டூரிசம் பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி கொடி வடிவில் அமைந்துள்ள கற்றாலை தோட்டத்தையும் பார்த்து ரசித்தார்.

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அந்த பகுதியே வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார்.

முன்னதாக ஈகோ டூரிஸம் மையத்தில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு இயந்திரத்தை இயக்கி பார்த்த மோடி அங்குள்ள பெண் பணியாளர்களுக்கு உற்சாக மூட்டினார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் சர்தார் சரோவர் அனைத்து சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி நர்மதா ஆற்றுக்கு ஆர்த்தி எடுத்தும் மலர் தூவியும் வழிபாடு நடத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




