சினிமா பட பாணியில் காரை திருடி சென்றவர்கள்!

சினிமா பாணியில் காரை திருடிச் சென்ற நபர்கள் போலீஸ் விசாரணை நடத்தியதால் சாலையோரம் விட்டு விட்டு தப்பிச் சென்ற சுவையான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் பாபுராஜ் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியை சேர்ந்த துரைசிங்கம் என்பவர் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளார்.

 

இந்நிலையில் பாபுராஜ் தனது காரை விற்பது பற்றி கூறிய போது தாம் உதவி செய்வதாக துரைசிங்கம் கூறியுள்ளார். காரை வாங்குவதற்கு தனக்கு தெரிந்த நபர் இருப்பதாக கூறி தனது உறவினரான பிரதாப் என்பவரை அழைத்து வந்துள்ளார். பாபுராஜ் விற்கவேண்டிய கார்கள் சாலிகிராமம் ஆற்காடு சாலையில் துரைசிங்கம் சந்தித்துள்ளார்.

 

அப்போது துரைசிங்கம் அவருடன் வந்த பிரதாபம் காரை ஓட்டி பார்ப்பதாக கூறி எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் நெடுநேரமாகியும் கார் திரும்ப வராததால் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். செல்போனின் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த பாபுராஜ் இதுதொடர்பாக நிலையத்தில் புகார் அளித்தார். திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவை காட்சியில் வருவது போல வாகனத்தை ஓட்டி பார்த்து வாங்குவதாக கூறி காரை எடுத்துச் சென்றுள்ளனர்.

 

புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் துரை சிங்கத்தின் செல்பேசி எண்ணை வைத்து முகவரியை கண்டுபிடித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து பிரதாப் மற்றும் துரைசிங்கம் ஆகிய இருவரும் கேகே நகரில் உள்ள 100 அடி சாலையில் காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு தகவல் தெரிவித்துவிட்டு ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் மீட்டனர் மேலும் காரை கடத்தி செல்ல முயன்ற பிரதாப், துரைசிங்கம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Leave a Reply