மோடியின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க வினர் மாணவர்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் கேன் வழங்கும் விழா

பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு செட்டிபாளையம் ஊ. ஒ. தொ. பள்ளி மாணவர்களுக்கு ரூ 15 ஆயிரம் மதிப்பிலான எவர்சில்வர் தண்ணீர் கேன் 1 வது மண்டல பாரதீய ஜனதா கட்சி சார்பில் வழங்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க வினர் இந்த வாரத்தை சேவை வாரமாக கொண்டாடி வருகிறார்கள். இதனைதொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதத்தில் 4- செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் கேன் ( பாட்டில் ) வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு பா.ஜ.க வின் 1 வது மண்டல பொது செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

 

மாவட்ட பொது செயலாளர் கதிர்வேல், கோட்ட பொறுப்பாளர் பாலகுமார், மண்டல தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை தரணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பா.ஜ.க மாவட்ட தலைவர் சின்னசாமி பள்ளியில் 1 மற்றும் 2 வது வகுப்பு படிக்கும் 63 மாணவ, மாணவிகளுக்கு ரூ 15 ஆயிரம் மதிப்புள்ள எவர்சில்வர் தண்ணீர் கேன்களை ( பாட்டில் ) வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் பொருளாளர் வேலுசாமி நன்றி கூறினார். விழாவில் முன்னாள் கவுன்சிலர் நடராஜ், துணை தலைவர் துரைராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply