சம்பத்கிரி மலையிலிருந்து குதித்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை முயற்சி!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத் கிரி மலையிலிருந்து குதித்து காதல் ஜோடி ஒன்று தற்கொலைக்கு முயன்று உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சப்தகிரி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலை. இந்த மலையை சுற்றி ஓடை, நீர்வீழ்ச்சி இருப்பதால் இம்மலைக்கு அடிக்கடி பொதுமக்கள் சென்று வருவது வழக்கம் திருவண்ணாமலை அருகே திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதல் ஜோடி மலையிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த நீலாம்பரி மற்றும் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்திருக்கிறார்கள். இதனால் விரக்தி அடைந்த இருவரும் போளூர் சம்பத் கிரி மலையில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பின்னர் இருவரையும் சிறு காயங்களுடன் மீட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


Leave a Reply