ஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கத்துறையிடம் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இடம் சரணடையத் தயாராக இருப்பதாக கூறி ப சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

அவரை வரும் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம் இவ் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இடம் தான் சரணடையத் தயாராக இருப்பதாக கூறி சிதம்பரம் சார்பில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

நேற்று விசாரணைக்கு வந்தபோது சிதம்பரம் ஏற்கனவே திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் சாட்சியங்களை கலைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், எனவே தேவைப்படும் போது அவரை காவலில் எடுத்து விசாரித்து கொள்வதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் எவ்வித முடிவையும் தெரிவிக்காமல் இன்றைய தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது .இந்நிலையில் சரண் அடைவதற்காக பா சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Leave a Reply