மாறுவேடப்போட்டியில் காந்தி, நேரு, பாரத தாய் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பார்வையாளர்களை அசத்திய குழந்தைகள் !!!

கோவையில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் பள்ளி குழந்தைகள் காந்தி, நேரு, பாரத தாய் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பார்வையாளர்களை அசத்தினர்.கோவையில் ஜே.சி.ஐ. அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக FACE 2019 எனும் தலைப்பில் மாறுவேட போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றன.பீளமேடு கோபால் நாயுடு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, போட்டிகளை கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நடராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில் குழந்தைகள் தன் வாழ்க்கைக் கனவு, கனவு நாயகன், பிடித்த தலைவர், பிடித்த விலங்கு, பிடித்த நடிகர், பிடித்த மற்றும் அரசியல் தலைவர் மற்றும் பல விதமான கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மாறுவேடம் பூண்டு மேடையில் வலம் வந்தனர்.

குறிப்பாக போட்டியில், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு குழந்தைகள் காந்தி, நேரு, பாரத தாய் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பார்வையாளர்களை அசத்தினர். போட்டிகளில் நடுவர்கள் சிறந்த மாறுவேடம் அணிந்த வெற்றி பெற்ற குழந்தைகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டிகளை ஜேசிஐ கவின்குமார் , பிரேமா, மோகனா பிரபா, சக்திவேல் சுகுமாரன், ரகுமான் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


Leave a Reply