நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நடுவில் உள்ள ஆறு பட்டியலின் மூலம் அவர் இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிலவின் ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
நிலவின் தென்பகுதி கணிக்க முடியாத அளவிற்கு அபாயகரமானது என்றும் அங்குள்ள மாசுகள் லேண்டருடன் கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. லேண்டர் உயிருடன் இருக்கும் ஆனால் அதன் உள்ளேயும் வெளியேயும் உள்ள தூசுகளை எதிர்த்து போராட வேண்டும் என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
2 thoughts on “விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் உள்ளது : ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம்”