பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டா கத்தியுடன் கேக் வெட்டியதாக முன்னாள் ரெளடி உட்பட மூவர் கைது!கோவையில் பரபரப்பு !!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சிவானந்தபுரம் பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டா கத்தியுடன் கேக் வெட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனை அடிப்படையாக கொண்டு கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் கொடிய ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்த நிலையில் கோவை சிவானந்தபுரம் மாருதி நகர் பகுதியை சேர்ந்த முன்னாள் ரெளடி கனி ( எ ) கனியமுதன்,சூர்யா மகேஸ்வரன் மற்றும் விளாங்குறிச்சி சாலை பகுதியை சேர்ந்த சசி ( எ ) ராஜரத்தினம் உள்ளிட்ட மூவரை இன்று சரவணம்பட்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.இவர்கள் மீது கொடிய ஆயுதங்களுடன் கேக் வெட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களிடமிருந்து 3 கொடிய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் தான் இது போன்று ரெளடிகள் தனது பிறந்த நாளை பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடும் நடைபெறுவது வழக்கமான ஒன்று.அவர்களை காவல் துறையினர் கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.இந்த நிலையில் கோவையிலும் இந்த கலாச்சாரம் பரவ தொடங்கியுள்ளது.

 

காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு இது போன்று மக்களை அச்சுறுத்தும் விஷயங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டா கத்தியுடன் கேக் வெட்டியதாக முன்னாள் ரெளடி உட்பட மூவர் கைது செய்யட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply