நாட்டில் இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு மாறும் அபாயகரமான சூழலை பா.ஜ அரசு ஏற்படுத்திவிட்டது என கே எஸ் அழகிரி குற்றச்சாட்டு !

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஊரணி (குளம்) தூர் வாரி பொதுமக்களுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சியை நிராகரித்தார் மாநில தலைவர் கே எஸ் அழகிரி.இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியை நிராகரித்த அக்கட்சியின் மாநில தலைவர்.இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணியில் காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் Je.S.ரமேஷ் பாபு தனது சொந்த செலவில் செட்டி ஊரணியை துார்வாரி புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

 

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியாதவது:சென்னையில் ஐகோர்ட் நீதிபதி ராஜினாமா செய்தது வருத்தம் அளிக்கிறது. இந்த பா.ஜ. அரசில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள், ஆர்.பி.ஐ. கவர்னர்கள், நீதிபதிகள் பணி செய்ய முடியாமல் தங்கள் பதவியை ராஜினாமா செய்வது தொடர்கிறது.

 

ஜனநாயகத்தின் சிறகுகள் ஒடிக்கப்படுகின்றன. ஊடகங்கள்தான் இதை வெளிப்படுத்த வேண்டும். நிர்வாகமே சரியாக நடைபெறவில்லை. சிதம்பரம் கைது தொடர்பாக அவரே சி.பி.ஐ. ஏதேனும் ஒரு குற்றச்சாட்டையாவது கூறட்டும் நான் வாதாடுவதையே நிறுத்திவிடுகிறேன் என்றார். ஆனால், சி.பி.ஐ. வழக்கறிஞர்களால் பதில் சொல்ல முடியவில்லை. தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெற வில்லை. அதனால்தான் காங்கிரஸ் கட்சி, மக்கள் நலன் கருதி ஊரணிகள், கண்மாய்களை துார்வாரும் பணியில் இறங்கி உள்ளோம்.

இதற்காக சொந்த பணத்தை சுமார் ரூ. 7 முதல் 10 லட்சம் வரை செலவு செய்து பணிகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 28 ஊரணிகள் துார்வாறும் பணி நடந்துள்ளன. நாட்டின் ஜி.டி.பி. சதவீதம் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது 9 சதவீதமாக இருந்தது. இது தற்போது 5 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனால் ஒன்றரை லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பார்லே பிஸ்கட் கம்பெனியை மூடிவிட்டனர்.

 

இந்த பா.ஜ. அரசு விளம்பரத்தை மட்டுமே மையமாக வைத்து செயல்படுகிறது. பிரதமர் மோடி நன்கு விபரம் தெரிந்தநபரை அருகில் வைத்து கொள்ள தவறிவிட்டார். பா.ஜ.வின் ஆட்சியில் பொருளாதார சரிவால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயகரமான சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. கல்லுாரிகளில் சேர இளைஞர்கள் விரும்பவில்லை. காரணம் ஏற்கனவே படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இழந்து நிற்கும்போது படித்து என்ன பயன் என அச்சப்படுகின்றனர். இவ்வாறு கூறினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியால் தூர்வாரப்பட்ட இடத்தை காண வந்து விட்டு இந்த மாவட்டத்தில் உட்கட்சி பூசல் இருப்பதை அறிந்த மாநில தலைவர் கே எஸ் அழகிரி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்து விட்டாத கூறப்படுகிறது இந்நிலையில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் சென்று நிகழ்ச்சியினை நிறைவு செய்தார். ராஜீவ் காந்தி பஞ்சாயத் ராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கம் குமார், எம்.எல்ஏ., மலேசியா பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாநில நிர்வாகி செல்லத்துரை அப்துல்லா உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

மாநில தலைவர் வருகையின் போது இக்கட்சியின் மாவட்ட தலைவர் (தெய்வேந்திரன்)
செய்தியாளர் சந்திப்பின் போதும் ஊரணி தூர் வாரி பொதுமக்களுக்கு அற்பணிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply