இன்று தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பதவி ஏற்கும் விழா!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடு ராஜ்பவனில் தெலுங்கானா ஹைதராபாத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அனைத்து தலைவர்களும் தமிழிசை சௌந்தரராஜன் நெருக்கமாக உள்ள தலைவர்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

 

குறிப்பாக இந்த விழாவானது 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. 10.30 மணிக்கு எல்லாம் அனைவரும் கூட வேண்டும் என்று அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழக அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதேபோல் தேமுதிக சார்பாக பிரேமலதா விஜயகாந்த், சரத் குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இதுதவிர பல முக்கிய பிஜேபியினர் பங்கேற்க உள்ளனர்.

 

ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களும் பாரபட்சமின்றி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நேரடியாகவும் சிலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆளுநர் மாளிகை முழுவதுமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட இருக்கிறது. உள்ளே செல்லக் கூடியவர்கள் உரிய ஆவணங்கள் வைத்து இருக்கக்கூடியவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

சரியாக 11 மணிக்கு நடைபெறக்கூடிய இந்த விழாவில் தெலுங்கானா தலைமை நீதிபதி ராகவேந்திரா சிங் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். அதன்பின்னர் ஆக இருக்கக்கூடிய முதலமைச்சர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.

 

அதுபோல பல்வேறு விதமான தலைவர்களும் இங்கே பங்கேற்க உள்ளனர். சட்டமன்ற., நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேபோல தெலுங்கானாவில் உட்பட்ட மாநிலத்திற்கு உட்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் களும் இதில் பங்கேற்க உள்ளனர்.


Leave a Reply