சந்திரயான் 2 திட்டத்தை கேலி செய்யும் வகையில் பதிவிட்ட பாகிஸ்தான் அமைச்சர்

இந்தியாவின் சந்திரயான் 2 திட்டம் குறித்து கேலி செய்யும் வகையில் இருந்த பாகிஸ்தான் அமைச்சர் பதிவு எழுத்துப்பிழை இருந்ததால் பலர் அவரை கேலி செய்து வருகின்றனர். இந்தியாவின் சந்திரயான் 2 திட்டத்தின்படி விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் போது 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

 

இதற்கான காரணம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதிவிட்டுள்ளார். அதில் விண்கலம் பற்றி பேசும்போது அரசியல்வாதி போலல்லாமல் விண்வெளி வீரர் போல மோடி பேசுகிறார் என்று ஏழை நாட்டின் 900 கோடி ரூபாய் நிதியை வீணாக்குவது குறித்தும் அவரிடம் மக்களவை கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

 

விக்ரம் லேண்டர் சந்திரனுக்கு பதில் மும்பையில் தரையிறங்கி இருக்கலாம் என்று அவர் கிண்டல் செய்திருந்தார். ஆங்கிலத்தில் இருந்த இந்த பதிவில் அவர் சேட்டிலைட் என்ற வார்த்தையை எழுத்துப் பிழையுடன் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து முதலில் பிழையில்லாமல் எழுதுங்கள் பிறகு இந்தியாவிற்கு அறிவுரை கூறலாம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.


Leave a Reply