திருவாடானை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அதிகாரிகளுடன் பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை சட்டமன்ற பகுதிக்குட்பட்ட திருவாடானையில் தமிழக அரசின் திட்மான குடிமராமத்து பணியின் கீழ் கண்மாய்கள், ஊரணிகள் அணைத்தும் பல கோடி ரூபாய் செலவில் ஆதியூர், வட்டாணம் கோவணி, வெளியங்குடி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மட்டுமல்லாது பெரும்பாண்மையான கண்மாய்கள் ஊரணிகளிவ் நடைபெற்றுவருகிறது.
இப்பணிகளை திருவாடானை சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பார்வையிட்டு தெரிந்து கொண்டார். மேலும் கண்மாய் மற்றும் நீர்பிடி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.