திருவாடானையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டகிளை மாநாடு தனியார் மஹாலில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அதன் திருவாடானை வட்ட கிளையினள் 13-வது மாநாடு பேரூந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.
முன்னதாக தமிழ்நாடு அசு ஊழியர் சங்கம் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் சேகர், தலைவர் சுப்பையா ஆகியோர் மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அங்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் நிறைவுறையாற்றினார். நிகழ்ச்சியில் வட்ட துணை தலைவர் ராசு நன்றியுரையாற்றினார். இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.