அலோபதி மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் பிடிபட்டனர்!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அலோபதி மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் பிடிபட்டுள்ளனர். பகண்டை கூட்டு சாலை சுற்றுவட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக முறையான கல்வித் தகுதி மற்றும் ஆவணம் இல்லாமல் அதிக பணம் பெற்றுக்கொண்டு மருத்துவம் பார்க்க படுவதாக மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மற்றும் நலப்பணி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

இதனையடுத்து திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளங்கலை படித்த 6. ஆம் வகுப்பு மட்டுமே முடித்து இருந்த அவரது மனைவி, கோவிந்தன் ஆகியோர் உரிய அனுமதியின்றி அலோபதி மருத்துவம் பார்ப்பது விசாரணையில் தெரியவந்தது.

 

மேலும் தடை செய்யப்பட்ட மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தம்பதியின் பேரையும் பிடித்து பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட சுகாதார நிலைய இணை இயக்குனர் ஒப்படைத்தார்.


Leave a Reply