மாணவ,மாணவிகளுக்கு இந்திய நிறும செயலாளர் ஆவதற்கான கல்வி குறித்த பயன்களையும்,கற்ப தற்கான வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
வர்த்தக நிறுவனங்கள் பொது மக்களின் நலனுக்கு எந்தவிதமான ஊறும் விளைவிக்காமல் பார்த்துக் கொள்வதற்காகவும்,அவற்றை சரியாக வழி நடத்துவதற்காகவும், மேலும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களுக்காகவும் இந்திய நடுவண் அரசால் துவங்கப்பட்டது இந்திய நிறுமச்செயலர்கள் நிறுவனம்.
வர்த்தக நிறுவனங்கள் கடைப் பிடிக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் செயல்முறைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் இதற்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றை இந்த நிறுவனம் அளித்து வருகிறது.இந்நிலையில் இந்த நிறுவனம் சார்பாக கோவையில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
இந்திய நிறுமச்செயலர் நிறுவனத்தின் கோவை கிளை தலைவர் மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐ.சி.எல்.எஸ்ஸின் நிறுவ பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் வணிகவரி துறை இணை ஆணையர் ஞானக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்வியாளர்களை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் நடைபெற்ற கருதரங்கில் கோவை உட்பட பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரிய,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.இதில் மாணவ, மாணவிகளுக்கு இந்திய நிறும கல்வி குறித்த பயன்களையும்,கற்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்திய நிறும செயலர் நிறுவனத்தின் நிர்வாகிகள் சிங்காரவேல்,துரைசாமி,பழனிக்குமார் மற்றும் அலுவலக மேலாளர்கள் ஸ்ரீஜித் மற்றும் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.