ரஷ்யாவுடன் சென்னையை இணைத்த மோடி!

சென்னை துறைமுகத்தில் இருந்து ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் துறைமுகத்திற்கு கப்பல் சென்று சேர 24 நாட்கள் ஆகும். தற்போது மும்பை துறைமுகத்தில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகம் செல்ல 40 நாட்கள் ஆகிறது. இந்த புதிய பாதையால் 16 நாட்கள் போக்கு வரத்து குறையும் சரக்கை கொண்டு சேர்ப்பதற்கான செலவு வெகுவாக குறையும்.

 

இந்தியாவிலிருந்து வட கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் மேற்கு பசிபிக் பிராந்திய களுடன் இணைக்கும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் மலேசியா சிங்கப்பூர் பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கொரிய நாடுகளுடன் வர்த்தகம் மேம்படும் கடல்சார் வணிகத்தில் இந்தியாவின் வலிமையை நிரூபிக்கும் வகையிலும் சீனாவின் மேலாதிக்கத்தை முறியடிக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட உள்ளது.

ரஷ்யாவின் விவசாய மற்றும் தங்கம் வைரம் பெற்றோரை கனிமவளங்கள் நிறைந்த பகுதியாகும். இந்தத் துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய இந்த ஒப்பந்தம் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் துறைமுகத்தின் இடையே கப்பல் போக்குவரத்து காண ஒப்பந்தத்தால் வேலைவாய்ப்பு பெறுவதோடு முதலீடுகளும் அதிகரிக்கும் என்கின்றனர் சரக்கு கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.


Leave a Reply