1500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கான பணியிடை தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி செவிலியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. 520 பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 1,500 செவிலியர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி தேர்வு எழுதிய செவிலியர்கள் டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply