நண்பனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பரின் நாய்க்கு வெட்டு!

சென்னையை அடுத்த போரூரில் வழிப்பறி செய்த செல்போன்களை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனை கொல்ல வந்த கூட்டாளிகள் நாயை விட்டு சென்றனர்.போரூர் அடுத்த கணபதி நகரைச் சேர்ந்த ரவி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

 

இந்த நிலையில் மது போதையில் அவரது வீட்டிற்கு வந்த நண்பர்கள் 3 பேர் ரவி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்த நாய் குரைத்ததால் அதை வெட்டி விட்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர். புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ரவியும் அவரது நண்பர்களும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

செல்போன்களை பங்கு கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரவில் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முத்து மற்றும் வெங்கட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply