ப சிதம்பரத்தை திகார் ஜெயிலுக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர்கள் தரப்பு வாதமாக தனது 74 வயதாகிறது, தயவுசெய்து திகார் ஜெயிலுக்கு அனுப்பி விடாதீர்கள் என்ற வாதத்தை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து சிதம்பரத்தை திகார் ஜெயிலுக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்து இருக்கிறது. வெள்ளிக்கிழமை இவர் சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்பட்டது சரியா தவறா என்பது தொடர்பாக வரும் வியாழக்கிழமை செப்டம்பர் ஐந்தாம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணையை தொடர்ந்து நடக்கும்.






