ஒரு கால் செய்தால் போதும்! கள்ளச்சாராயம் டோர் டெலிவெரி
கடலூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் செல்போன் எண்களில் அழைத்தால் வீடுதேடி கள்ளச்சாராயம் டோர் டெலிவரி செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள வள்ளி மதுரம், வடபாதி, பனையாத்தூர் ஆகிய இடங்களில் ஆங்காங்கே கள்ளச்சாராய குப்பைகள் போல் கிடைக்கின்றன.
இந்த கிராமங்களில் கள்ளச்சாராயம் ஒளிவு மறைவாக விற்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. செல்போனில் தொடர்பு கொண்டு நாம் இருக்கும் இடத்தை கூறினால் போதும். அவர்கள் இரு சக்கர வாகனத்தில் தேடி வந்து கள்ளச்சாராயத்தை தேடி வந்து விற்கின்றனர். இதேபோல் டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.
குடிமகன்களை தேடிவரும் கள்ளச்சாராய பாக்கெட்டின் விலை 60 ரூபாய் முதல் 89 ரூபாய் வரை விற்பனையாகிறது. கள்ளச்சாராயம் வெளிப்படையாக விற்கப்படுவது தெரிந்தும் கூட மக்கள் புகார் அளித்தும் திட்டக்குடி சிறுபாக்கம் காவல் நிலைய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதே நிலையை தொடர விட்டால் ஊரில் பெரும்பாலானோர் கள்ளச் சாராயத்துக்கு அடிமையாகி சூழல் ஏற்படும். எனவே காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி கடும் நடவடிக்கை எடுத்த கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




