தூர்வாருவதற்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளும் கட்சியினர் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு!

நீர்நிலைகளை தூர்வார அதற்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதியை ஆளுங்கட்சியாக எடுத்துக் கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளரிடம் பேசிய அவர், காவிரி பாசன பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை என்று ஒரு சில தினங்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

 

எனினும் ஒரு போக சம்பா சாகுபடி கூட மேற்கொள்ள முடியாமல் டெல்டா விவசாயிகள் கடனில் சிக்கி தவிப்பதாகவும் முத்தரசன் கூறினார். கடந்த ஆறு மாதமாக ஆறு, குளம், வாய்க்கால்களை தூர்வார தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் அவசர அவசரமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சித்தார். தூர்வாருவதற்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளும் கட்சியினரை அப்படியாக மொத்தமாக எடுத்துக் கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


Leave a Reply