--- --:--:-- --

பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருது – அமைச்சர் வேலுமணி வழங்கினார்!

15

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருதுகளை அமைச்சர் வேலுமணி கோவையில் இன்று வழங்கினார்.

 

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான யூ ஆர் லவுட் (You are Loved) மற்றும் அம்மா கல்வியகம் கோவையில் உள்ள கே.பி.ஆர். கல்லூரியுடன் இணைந்து, ‘புரட்சியாளர் விருது’கள் வழங்கும் விழா கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.தொடர்ந்து 4 வது ஆண்டாக நடைபெறும் இதில் தமிழகத்தின் மதுரை, சென்னை, திருச்சி உட்பட 33 வருவாய் மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் தகுதி வாய்ந்த 67 மாணவர்களையும்,33 ஆசிரியர்களையும் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக இந்த விருதுக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் 7 வெவ்வேறு பிரிவுகளில் அதாவது அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு, சமூகப் பணி, விளையாட்டு, மாற்றுத் திறனாளி மற்றும் இசை போன்ற பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் விருதுகள் வழங்கி பேசிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதுபோன்ற விருதுகளும், அங்கீகாரமும், அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதுடன், குறிப்பாக, கிராப்புற ஏழை மாணவர்களையும் பொருளாதாரத்திலும், சமூகப் பின்னணியிலும், அடித்தட்டில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும் நம்பிக்கை கொள்ளச் செய்து அவர்களிடையே ஒரு சாதகமான நம்பிக்கை மனநிலையை உண்டாக்க இந்த விருதுகள் உதவும் எனத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon