லஞ்சப் புகாரில் சிக்கிய மத்திய மறைமுக மற்றும் சுங்கவரி வாரிய அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
லஞ்ச புகாரில் சிக்கியுள்ள மத்திய மறைமுக மற்றும் சுங்க அதிகாரிகளின் பட்டியலில் சென்னை மண்டலத்தில் பணியாற்றிவரும் மேற்பார்வையாளர் ஆசிரியரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த கேபிள்டிவி ஆபரேட்டர் ஒருவரிடம் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் அசோக்ராஜ் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினார்.
அவரின் அலுவலக இருப்பிடத்தில் நடத்திய சோதனையில் இரண்டு இலட்சம் ரூபாய் பணமும் சிக்கியது. இதேபோல் டெல்லி, பெங்களூரு, நாக்பூர், ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் புகார்களில் சிக்கிய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.