கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்களும், நோயாளிகளும் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் உள்ளது. கோவில்பட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மூலமாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிகுள்ளான நிலைகளில், பணியாற்றி வந்த மருத்துவரும் ஒரு மாத விடுப்பு எடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை கொண்டு ஸ்கேன், சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது, அந்த மருத்துவரும் தனியார் மருத்துவமனையில் தனது பணியை முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் தான் இங்கு வந்து பணிபுரிகிறான் என்றும், இதனால் ஸ்கேன் எடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.