தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் பூனை கண்காட்சி மற்றும் பூனைவளர்க்கும் முறை குறித்த க௫த்தரங்கு !!!

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் பூனை கண்காட்சி மற்றும் பூனைவளர்க்கும் முறை குறித்த க௫த்தரங்கு கோவையில் உள்ள தனியார் ஹாலில் நடைபெறுகிறது.

 

கோவை பைபாஸில் உள்ள தனியார் அரங்கில் வருகின்ற 25 ஆம் தேதி பூனைக்குட்டிகள், பூனைகளை எப்படி பராமரிப்பது மற்றும் பூனைகளை பற்றி அறிந்துகொள்வது மற்றும் பூனைகளின் படங்களும்,க௫த்தரங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

மேலும்,இந்த கண்காட்சி, கருத்தரங்கம் கோவையில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் பூனைக்குட்டிகள்,பூனைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படவுள்ளது.

 

இந்த பூனை கண்காட்சியில் பல்வேறு வகையான இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பூனைகள் கண்காட்சியில் வைக்கப்படவுள்ளது. மேலும்,உலகம் முழுவதும் 93 வகையான பூனைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 41 வகையான பூனைகள் உள்ளன.

கோவையில் பெர்சியன் லாங்கேட்,பெர்சியன் கேட்,ஹிமாலயன் கேட், பெங்கால் கேட், சியாமிஸ் கேட், சைபீரியன், ரஷ்யன் ப்ளூ, இந்தியன் நாட்டு வகை பூனைகளும் உள்ளன.மேலும், கோயம்புத்தூர் கேட்டரி கிளப் அமைப்பு ஊழியர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பூனை வளர்ப்போருக்கு மற்றும் பூனை வி௫ம்பிகளுக்காக இது துவங்கப்பட்டுள்ளது.


Leave a Reply