முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் 26 ஆம் தேதி வரை சி‌பி‌ஐ காவலில் இருக்க உத்தரவு

ப சிதம்பரம் திங்கட்கிழமை வரை சிபிஐ காவல் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வரும் 26-ம் தேதி சி‌பி‌ஐ காவலில் வைப்பு. முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா விற்கு முறைகேடாக பணம் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

நேற்றைய தினம் கைதான சிதம்பரம், இன்றைய தினம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் சிபிஐ கேட்டபடி 5 நாட்கள் சிதம்பரம் சிபிஐ காவல் துறைக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் வரும் 26-ம் தேதி வரை சி‌பி‌ஐ காவலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply