கஞ்சா வியாபாரியை உப்பு வியாபாரியாக மாற்றிய காவல்துறை ஆய்வாளர்

மதுரை அருகே கஞ்சா வியாபாரி உப்பு வியாபாரியாக மாற்றிய காவல்துறை ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மதுரையைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டுள்ளார்.

இவர் மீது மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தன்னை சமுதாயம் குற்றவாளியாக பார்த்ததாக வந்த இப்ராஹீம் ஷா நினைத்துள்ளார். ஆனால் யாரும் நம்பாத நிலையில் தான் திருந்தி விட்டதாகவும், சொந்தமாக வியாபாரம் செய்ய உள்ளதாகவும் காவல் ஆய்வாளர் ஷீலாவிடம் கூறியுள்ளார்.

 

இதையடுத்து இப்ராகிம் ஷாவிற்கு ஒரு சைக்கிளும், ஒரு உப்பு பாக்கெட்டும் வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர் ஷீலா அவரை உப்பு வியாபாரம் செய்ய வைத்துள்ளார். மேலும் இப்ராஹிம் சாவிற்கு ஒரு செல்போனை வாங்கி கொடுத்து உள்ள காவல் ஆய்வாளர் ஷீலா அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதற்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


Leave a Reply