இராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் உஸ்மான்(55). இவரது மருமகன் கசாலி, 40. இவர் சிங்கப்பூரில் இருந்து இன்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். இவரை காரில் ஏற்றிக் கொண்டு
உஸ்மான் 55, இவரது மகள்கள் தஸீமா, 37, கசாலி மனைவி ஐனூல் 35 ஆகியோர் சாத்தான்குளம் திரும்பினர். டிரைவர் செந்தில் காரை ஓட்டி வந்தார்.

பரமக்குடி சோமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திமுக பிரமுகர் மணி நகர் சங்கர் 54, இருசக்கர வாகனத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் காரில் உஸ்மான், தஸீமா, ஐனூல், சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் டிரைவர் செந்தில் குமார் தப்பி ஓடினார். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய கசாலி, மிகுந்த சிரமங்களுக்கு இடையே மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் மீட்கப்பட்ட உடல்கள், அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.






