திருமணம் ஆகி 4 மாதங்களில் குழந்தை பிறந்ததால் தாயே குழந்தையை கொலை

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் சப்னாமோல் (19). கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த முஜீப்ரகுமானுக்கும் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணம் ஆகி 4 மாதங்களில் அழகான பெண் குழந்தையை பெற்றார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுனீல் நியூகோப் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில், மூச்சு திணறி குழந்தை இறந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சப்னாமோலிடம் தீவிர விசாரணை நடத்தியதில், குழந்தையை கொலை செய்ததாக தாயை போலீசார் கைது செய்தனர்.அவர் அளித்த வாக்குமூலத்தில், திருமணம் ஆகி 4 மாதங்களில் குழந்தை பிறந்ததால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

 

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போர்வையால் குழந்தையின் முகத்தை அழுத்தி கொலை செய்தேன். என அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply