அத்திவரதரையும், இந்து மத நம்பிக்கையும் கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் அடங்கிய பலகை.கொதித்தெழுந்த இந்து அமைப்பினர் !!!

அத்திவரதரையும், இந்து மத நம்பிக்கையும் கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் வெளியிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

கோவை கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வைத்துள்ள அறிவிப்பு பலகையில் புத்தி வருமா என்ற தலைப்பில் அத்திவரதர் பார்க்கப் போய் அவரு பணக்கார சாமி ஆகிவிட்டார், அவரைப் பார்க்கப் போன எத்தனை பேரு பணக்காரர் ஆகி இருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அத்திவரதர் சுவாமியையும்,இந்து மதத்தையும் புண்படுத்தும் வகையில் இதுபோன்ற வாசகத்தை வெளியிட்டிருப்பதாக தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

 

இவ்விவகாரம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த இக்கூட்டமைப்பினர் பல கோடி பக்தர்களின் மனது புண்படும் விதமாக இது போன்ற வாசகங்களை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பின்னர் எழுதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், இந்து மத துவேசம் செய்துவரும் இவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Leave a Reply