பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக “அம்மா பட்ரோல்”. ரோந்து வாகனம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக “அம்மா பட்ரோல்” என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி மாவட்டந்தோறும் இதற்காக தனி அதிகாரிகளை நியமிக்க பட்டு மகளிர் காவல் நிலையங்களுடன் இணைத்து செயல்பட்டு வருகிறது.இந்த பிரிவுக்கு தலைவராக ஏடிஜிபி ரவி இருக்கிறார்.

 

தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்த பிரிவே விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து மத்திய மாநில அரசு இணைந்து பிங்க் நிற ரோந்து வாகனத்தை உருவாக்கி அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி குழந்தைகளுக்காக 1098 என்ற எண்ணிலும், பெண்களுக்காக 1091 என்ற எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது.

 

முதற்கட்டமாக சென்னையில் 35 ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அடுத்த வாரம் இந்த ரோந்து வாகனத்தை ஒப்படைக்க உள்ளது. ஏற்கனவே கேரளாவில் இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் பெண்கள் தவிர வயதானவர்களுக்கும் இத்திட்டம் உதவும்.

 

குறிப்பாக யாராவது பெண்களை கேலி செய்தாலோ அல்லது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாலோ அதிரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் இந்த ரோந்து வாகனங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட திட்டமிடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply