விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி ஒதுக்க செங்கோட்டையன் திட்டம்

கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

 

இதில் பரிசுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், விரைவில் 36 மாணவர்களும், 4 பயிற்சியாளர்களும் ஜெர்மன் நாட்டிற்கு கால்பந்து பயிற்சிபெற அனுப்பப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் கிராமப்புறப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து செங்கோட்டையன் விளக்கினார்.’கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த69 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் விளையாட்டு பயிற்சி எடுப்பதற்கு பள்ளிகள் வருவாய்த்துறை அலுவலகங்கள் உட்பட அரசு இடங்களில் மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்பொழுது விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு 3 சதவீதம் உள்ள நிலையில் விரைவில் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்பது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்’ எனத் தெரிவித்தார்.


Leave a Reply