பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நவீன இரும்பு மனிதர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பாராட்டியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370 வது பிரவினை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் காஷ்மீர் மாறியுள்ளது.
இந்த அறிவிப்பை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருவதோடு பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக புகழ்ந்து வருகிறார்கள்.அந்த வகையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இரும்பு மனிதர் போல் பிரதமர் மோடி செயல்படுவதாகவும், அவருடன் இணை இரும்பு மனிதர் போல் அமித்ஷா செயல்பட்டு வருவாகவும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் குறித்த அரசின் இந்த அறிவிப்பு ஓட்டுக்கானது அல்ல என்றும் நாட்டுக்கான அவசியம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.மேலும் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக சாதனையை புரிந்துள்ளது என்றும் கலவர பூமியாக இருந்த காஷ்மீர், சுற்றுலாத் தலமாக, பழைய பெருமையை பெற்றுள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று ஜம்மு காஷ்மீர் மசோதாவுக்கு திமுக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.