19 வயசு பிரியா ஏன் தூக்கில் பிணமாக தொங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிபாக்கம் அடுத்த பாணாவரத்தை சேர்ந்த தம்பதி கோதண்டராமன் – சாந்தா. பாணாவரம் ரயில்வே ஸ்டேஷனில் இட்லி கடை வைத்துள்ளார். இவரது 19 வயது மகள் பிரியா, நாடகங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்.
அதனால் ஒரு குழுவை வைத்து, கோயில் திருவிழாக்களில் நாடகங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று, சாந்தா இட்லி வியாபாரத்தை முடிந்து வீட்டிற்கு வந்தால் பிரியாவை காணவில்லை. அதனால் நாடகம் சம்பந்தமாக வெளியில் போயிருக்கலாம் என்று நினைத்து விட்டார்.
ஆனால் அந்த வீட்டின் ஒருரூமில் இருந்து நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. அந்த ரூம் எப்போதுமே மூடிதான் இருக்குமாம். எனினும், கதவு மூடப்பட்ட நிலையிலும் குப்பென்று துர்நாற்றம் வீசியதால், சந்தேகத்துடன் கதவை தள்ளி பார்த்தார் சாந்தா. ஆனால் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
அதனால், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து, கதவை உடைத்து கொண்டு போய் பார்த்தால், பிரியா பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அலறி துடித்தார் சாந்தா. உடனடியாக பாணாவரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நடிகை பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. சடலத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணையை மிக தீவிரமாக நடத்தி வருகிறார்கள்.