தந்தையின் கண்டிப்பால் மனவேதனை அடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மும்பையைச் சேர்ந்தவர் ஆரத்தி தபசே ( 18). இவர் அங்குள்ள ஒரு பெண்கள் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். அதனால் இரவு நெடுநேரம் கழித்து வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என தெரிகிறது.இதனால் அவரை தந்தை கண்டித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தந்தை – மகள் இருவருக்கும் தினமும் வாக்குவாதம் எழுந்துவந்துள்ளது.

 

இந்நிலையில் வீட்டுக்கு இரவு தாமதாக வந்த ஆரத்தியை,அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், கீழே குதித்த ஆரத்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply