லாஸ்லியவை குறிவைக்கும் ஹவுஸ் மேட்ஸ்களின் வோட்!

கடந்த வாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் படலம் அனைவர் மத்தியிலும் வெளிப்படையாக நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத போட்டியாளரான ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். இதற்கு கமல் கூறிய காரணமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை.

 

இதை தொடர்ந்து இந்த வாரம், எப்போதும் போல் நாமினேஷன் படலம், பிக்பாஸ் அறையில் நடக்கிறது. இதன் காட்சிகள் தற்போது மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

 

இந்த வாரம், இதுவரை ஒரு முறை கூட நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாமல் இருந்த, லாஸ்லியா வசமாக சிக்கியுள்ளார். இவருக்கு எதிராக நடிகர் சரவணன், சாக்ஷி, மற்றும் ஷெரின் ஆகியோர் வாக்களிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

லாஸ்லியா நாமிநேஷனில் சிக்கி இருந்தாலும், இவர் வெளியேறும் வாய்ப்புகள் மிக குறைவு என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


Leave a Reply