தொண்டியில் பேரிடர் தடுப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே தொண்டியில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வெள்ளம் புயல் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களில் தேர்ந்தெடுத்து அந்த கிராமங்களில் பேரிடர் ஏற்படும் காலங்களில் அதை தடுப்பது பற்றியும் அதிலிருந்து தப்பிப்பது பற்றியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொண்ட ஒத்திகை நடைபெற்றது.

இந்த முன்னறிவிப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் அவரது முன்னிலையில் நேரடிப்பார்வையில் நடைபெற்றது. இந்த இந்த ஒத்திகையில் வெள்ளம் சுனாமி புயல் போன்ற காலங்களில் பாதிக்கப்படும் நபர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளிப்பது பற்றியும் மேல் தளங்களில் சிக்கியுள்ள மனிதர்களை காப்பாற்றுவது எப்படி என்பது பற்றியும் குறுகலான இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது எப்படி என்பது பற்றியும் செய்து காண்பிக்கப்பட்டது.

அதில் திருவாடானை ஆர்எஸ் மங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரெட் கிராஸ் அமைப்பினர் தன்னார்வ ஆர்வலர்கள் மற்றும் திருவாடானை அனைத்து அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த ஒத்திகையில் முதல் ஒத்திகையாக ஓர் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் வெள்ளம் அதிகம் போய்க் கொண்டிருப்பது போலவும் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் கொண்டு வருவது போலவும் நடைபெற்ற போது 108 ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்தை விட்டு வெகு தூரம் சென்று திரும்பியது இதனால் சற்று குழம்பினார்கள் ஒத்திகை செய்யும் முன்பு சரியாக ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.இது போன்ற குழப்பங்கள் நடைபெற்றது என்றும் தெரிவித்தார்கள்.

 

மேலும் இது போன்ற உத்திகள் நடைபெறுவதற்கு முன்பு பொதுமக்களிடம் தகவல் தெரிவித்து இருந்தால் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் இருந்திருப்பார்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஏற்பாடு செய்ததால் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் பொதுமக்கள் சற்று புலம்பி பீதியடைந்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிவித்து பின்னர் செய்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Leave a Reply