இந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறப்போவது இவரா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.  சண்டை, கூச்சல், அழுகை, காதல் எனச் சென்று கொண்டிருக்கும் இந்த போட்டியிலிருந்து இதுவரை பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3-இல் இந்த வாரம் வெளியேறுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில், சேரன், அபிராமி, மீரா, சரவணன், சாக்ஷி, கவின் ஆகிய ஆறு பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் குறிப்பாக மீரா விஷயத்தில் சாக்ஷி கூறியது பொய்யோ அல்லது அவரது மறதியோ எதுவாக இருந்தாலும் அது சாக்ஷி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் இழக்க செய்துவிட்டது.

மேலும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் சாக்ஷி பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் தெரிகிறது. அந்த வகையில் இந்த ஆறு பேரில் சாக்ஷி இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்த எவிக்ஷனில் சாக்ஷி தப்பித்தால் பிக் பாஸின் டார்கெட் மீரா தான் என்றும் பேசப்படுகிறது.இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் காப்பாற்றப்படுவார், யார் வெளியேற்றப்படுவார் என்ற உறுதியான தகவல் நிகழ்ச்சியின் முடிவில் தான் தெரியவரும்.


Leave a Reply