பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு அசத்தல்

கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.நேசனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் 33 வது ஆண்டு விழாவை யொட்டி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டிகளைபள்ளித் தாளாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் .

இதில் 100 , 200 , மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், , உயரம் தாண்டுதல் , நீளம் தாண்டுதல் , குண்டு எறிதல் , வட்டெறிதல் , ஈட்டி எறிதல் , தொடரோட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இது போன்ற வெளி அரங்கில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொள்வதாகவும், மேலும், பெற்றோர்களையும் இதில் கலந்து கொள்ள வைத்துள்ளதாகவும் பள்ளியின் முதல்வர் பேபி தெரிவித்தார்.


Leave a Reply