ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்ஹா மத நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் அல் குத்பு சுல்தான் செய்ய து இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா 845 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழாவில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா நடைபெறும், ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக் கூடு விழாவில், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

 

நடப்பாண்டு விழா ஜூலை 4 ஆம் தேதி பாதுஷா நாயகத்தின் மார்க்க அறிஞர்களால் ஓதப்படும் புகழ் மாலை ( மவுலீது) உடன் விழா தொடங்சியது. இதை தொடர்ந்து, தர்ஹா வளாகத்தில் ஜூலை 13 மாலை அடி மரம் ஏற்றப்பட்டது. ஜூலை 14 மாலை 4 மணியளவில் மேள, தாளம் முழங்க யானை, குதிரை முன் செல்ல அலங்கரிக்கப்பட்ட கூடு ஏராளமான மக்கள் பின் தொடர ஊர்வலமாக தர்கா வந்தடைந்தது.

அன்றிரவு இரவு 7:40 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஜூலை 25 ஆம் தேதி வரை தினமும் மவுலீது நடந்தது. . திருவிழாவின் முக்கிய நிகழ்வான உரூஸ் என்னும் சந்தனக் கூடு ஜூலை 26 ஆம் தேதி மாலை தொடங்கியது. நாட்டியக் குதிரைகள் நடனத்துடன், அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலத்துடன், வானில் வர்ண ஜாலம் காட்டிய வாண வேடிக்கை சத்தத்துடன் மத நல்லிணக்க சந்தனக் கூடு ஜூலை 27 அதிகாலை தர்ஹா வந்தடைந்தது.

மக்பராவில் புனித சந்தனம் தாஹா ஹக்தார் பொது மகா சபை நிர்வாகிகளால் பூசப்பட்டது ஆக., 2 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கொடியிறக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் பொது மகா சபையினர் செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கலந்து கொண்டார் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தல் படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Leave a Reply