பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியிலிருந்து இதுவரை பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3-இல் இந்த வாரம் வெளியேறுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.அதன் படி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில், சேரன், அபிராமி, மீரா, சரவணன், சாக்ஷி, கவின் ஆகிய ஆறு பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இதில் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு இருக்கும் நபர் மீரா. அதனால் அவரை கண்டிப்பாக இந்த வாரம் வெளியேற்றியே ஆக வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது அவர்களின் ஆசை படியே மீரா இந்த வாரம் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாக்கெடுப்பிலும் இவரே பின் தங்கியுள்ளதால் இவர் தான் வெளியேறுவார் என்று பேசப்படுகிறது.