36 காந்த உருண்டைகளை விழுங்கிய குழந்தை! குடலில் ஏற்பட்ட ஓட்டை

சீனாவில் குழந்தை விழுங்கிய காந்த உருண்டைகள் ஒன்றுசேர்ந்து மாலைபோல கோர்த்துக் கொண்டதால் குடலில் ஓட்டைகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு வயது குழந்தைக்கு வாந்தியும், காய்ச்சலும் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

அங்கு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்த போது, குழந்தையின் வயிற்றில் மாலை போன்ற ஒன்று வட்ட வடிவில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதனை அப்புறப்படுத்தினர்.

குழந்தை, பெற்றோருக்குத் தெரியாமல் ஒவ்வொன்றாக 36 காந்த உருண்டைகளை ஒவ்வொரு நேரத்தில் விழுங்கியதாகவும், குடலின் வடிவமைப்பில் அருகருகே இருந்த காந்த உருண்டைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

காந்த ஈர்ப்பு சக்தியால் ஒட்டிக் கொண்ட இடங்களில் இருந்த குடலில் திசு அரிப்பு ஏற்பட்டு ஓட்டைகள் விழுந்ததாகவும், பித்த நீர் சுரப்பும் ஏற்பட்டு உடல்நலம் குன்றியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே 14 வயதுக்குட்பட்டோருக்கு விளையாடுவதற்காக கட்டாயம் காந்த உருண்டைகளை வாங்கித் தர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர்.


Leave a Reply