தண்ணீர் டேங்கர் டிரைவரை ஜாதியைச் சொல்லி போதையில் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் மீது புகார்

இராமநாதபுரம் அருகே புல்லங்குடி சாத்தையா மகன் தண்டாயுதபாணி, 34. தேவிபட்டினம் அருகே அம்மாரி கிராமத்தில் வசிக்கும் இவர், அம்மாரி சங்கரிடம் தண்ணீர் டேங்கர் டிரைவராக இரண்டரை ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அம்மாரியில் இன்று நடந்த கோயில் திருவிழாவிற்கு டேங்கரில் தண்ணீர் எடுத்துச் சென்றார்.

சுரேஷ்
சுரேஷ்

மதியம் 3 மணியளவில் கோயில் பகுதியில் தண்டாயுதபாணி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே ஊரைச் சேர்ந்த தனிப்பிரிவு காவலர் (திருப்பாலைக்குடி) கார் வண்ணன், அவரது நண்பர்கள் உலக நாதன், ரமேஷ் ஆகியோர், தண்டாயுதபாணியை ஜாதியைச் சொல்லி தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து தண்டாயுதபாணி, டேங்கர் உரிமையாளர் சங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி, சங்கரின் மைத்துனர் பேராவூர் கணபதி மகன் சுரேஷ் அம்மாரி கோயிலுக்கு வந்தார்.

தண்டாயுதபாணி( டிரைவர்)
தண்டாயுதபாணி( டிரைவர்)

தண்டாயுதபாணி மீதான தாக்குதல் தொடர்பாக தட்டிக் கேட்ட சுரேஷ் மீதும் கார் வண்ணன் அவரது நண்பர்கள் தாக்குதல் நடத்தினர். காயமடைந்த தண்டாயுதபாணி, சுரேஷ் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாதியைச் சொல்லி திட்டி தாக்கியதாக தண்டாயுதபாணி புகாரில் தேவிபட்டினம் எஸ்.ஐ., ஜெயபாண்டியன் விசாரித்து வருகிறார்.


Leave a Reply