திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் அருகே மனநிலை பாதித்த ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சோர்ந்துபோன முகத்துடன், உடல் முழுவதும் அழுக்கு படிந்த நிலையில் பார்க்க அருவருப்பாக இருந்துள்ளார்.
அப்போது போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த அனுப்பர்பாளையம் போலீஸ்காரர் கணேசன் (456) மனநிலை பாதித்தவரை கண்டு மனம் வருந்தி அவரை அழைத்து தனது கையாலே அவரது முகத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தார்.
அப்போது போலீஸ் நிலையம் அருகே வசித்து வரும் பஷீர் என்பவர் இதை பார்த்து அவர் தன் பங்குக்கு ஒரு லுங்கியை கொடுத்தார். போலீஸ்கார கணேசன் அந்த லுங்கியை அவருக்கு மாற்றிவிட்டு அவரை கைத்தாங்கலாக அழைத்து சென்று சாப்பிட உணவு பொருட்களையும் வாங்கி கொடுத்தார்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸ்காரர் கணேசனின் சேவையை வெகுவாக பாராட்டினார்கள்.