மதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும்,மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும் மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.மதுக்கரை அருகே உள்ள ரொட்டி கவுண்டனுர் கிராமத்தில் சட்ட விரோதமாக  சர்ச் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

 

இங்கு வெளியூர்களில் இருந்து வரும் கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் ஜெபம் செய்வதோடு மட்டுமல்லாமல் கிராம மக்களிடம் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் இந்து முன்னணி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் பேச்சி முத்து, சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இயங்கி வரும் சர்ச் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

கட்டாய மதமாற்றம் செய்வதை தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வின்போது இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் தன்பால் உள்ளிட்ட பிரமுகர்கள் உடன் இருந்தார்.


Leave a Reply