உண்மை தொண்டர்கள் அதிமுகவில் இருக்க நியாயமில்லை எனக்கூறிய ஸ்டாலினுக்கு பழனிசாமி கொடுத்த பதிலடி!

அதிமுகவுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் உண்மை தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் எனவும் உண்மை தொண்டர்கள் அதிமுகவில் இருக்க நியாயமில்லை எனவும், திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். தேனியில் அமமுக தொண்டர்கள் திமுகவில் இணையும் விழாவில் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

இந்நிலையில், இன்று ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டரையும் தொட்டுப் பார்க்க முடியாது என ஸ்டாலினுக்கு பதில் கொடுத்துள்ளார்.


Leave a Reply